Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர் மற்றும் வீராணம் ஏரி நிலவரம்: பூண்டியில் 4 செ.மீ. மழை பதிவானது!

திருவள்ளூர் மற்றும் வீராணம் ஏரி நிலவரம்: பூண்டியில் 4 செ.மீ. மழை பதிவானது!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூண்டியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு மற்றும் மழை நிலவரம் குறித்த விரிவான விவரங்கள் வெளியாகியுள்ளன.திருவள்ளூர் மற்றும் வீராணம் ஏரி நிலவரம்: பூண்டியில் 4 செ.மீ. மழை பதிவானது!

திருவள்ளூர் மாவட்ட மழை நிலவரம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவுகள் விவரம்:திருவள்ளூர் மற்றும் வீராணம் ஏரி நிலவரம்: பூண்டியில் 4 செ.மீ. மழை பதிவானது!

we-r-hiring

பூண்டி: 4 செ.மீ. திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஜமீன் கொரட்டூர், பூவிருந்தவல்லி, ஆவடி, தாமரைப்பாக்கம்: தலா 3 செ.மீ. தேர்வாய்கண்டிகை: 2 செ.மீ. திருத்தணி, திருவாலங்காடு: தலா 1 செ.மீ.

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்
சென்னை குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.-யில் தற்போது 5.262 டி.எம்.சி. (44.76%) நீர் இருப்பு உள்ளது.

ஏரி வாரியான விவரங்கள்:
புழல் ஏரி: 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1,721 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது (52.15%). ஏரிக்கு 240 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது; குடிநீருக்காக 183 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி: நீர் இருப்பு 55.69% உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரி: 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 269 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது (53.8%). ஏரிக்கு 60 கன அடி நீர்வரத்து வருகிறது. பூண்டி ஏரி: நீர் இருப்பு 35.13% ஆக உள்ளது. சோழவரம் ஏரி: 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 107 மில்லியன் கன அடி (9.9%) நீர் இருப்பு மட்டுமே உள்ளது. ஏரிக்கு 40 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

கீழணை மற்றும் வீராணம் ஏரி நிலவரம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள கீழணை மற்றும் வீராணம் ஏரியின் நீர்மட்ட நிலவரம் பின்வருமாறு: கீழணை நீர் மட்டம் / கொள்ளளவு: 0 / 9.0 அடி

நீர் வரத்து மற்றும் வாய்க்கால்கள்: வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால் மற்றும் கும்மிக்கி மண்ணி ஆறு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நீர்வரத்து நில் என பதிவாகியுள்ளது.

வீராணம் ஏரி
தற்போதைய நீர்மட்டம்: 41.90 அடி (மொத்த நீர்மட்டம்: 47.50 அடி).
நீர் இருப்பு: 326.60 / 1,465.00 மில்லியன் கன அடி.
நீர் வரத்து: வடவாறு வழியாக நீர்வரத்து தற்போது நில் நிலையிலுள்ளது.

குடிநீர் விநியோகம்: சென்னை வாழ் மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. VNSS கால்வாய் மற்றும் பாசனத்திற்கான நீர் திறப்பு நில் நிலையிலுள்ளது.

2026-27 மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஆகஸ்ட் 13-ல் ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம் – சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

MUST READ