Homeசெய்திகள்சினிமாநடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்குத் தோள்பட்டையில் வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை: 3 மாதங்களில் இயல்பு நிலை...

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்குத் தோள்பட்டையில் வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை: 3 மாதங்களில் இயல்பு நிலை திரும்புவார் என மருத்துவமனை அறிவிப்பு!

-

- Advertisement -

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பேரனும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான ஜூனியர் என்.டி.ஆருக்குத் தோள்பட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆர்த்ரோஸ்கோபிக்’ அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்குத் தோள்பட்டையில் வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை: 3 மாதங்களில் இயல்பு நிலை திரும்புவார் என மருத்துவமனை அறிவிப்பு!

படப்பிடிப்பில் நேர்ந்த தோள்பட்டை காயம் – நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்குச் சமீபத்தில் படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளின் போது எதிர்பாராதவிதமாகத் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில், அவருக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இருப்பினும், காயம் அடைந்த பகுதி விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் நவீன நுண் அலை ‘ஆர்த்ரோஸ்கோபிக்’ (Arthroscopic) அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.

we-r-hiring

அதன்படி, செகந்திராபாத்தில் உள்ள பிரபல ‘கிம்ஸ்’ (KIMS) மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, நிபுணத்துவம் வாய்ந்த எலும்பியல் மருத்துவர்கள் தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்குத் தோள்பட்டையில் வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை: 3 மாதங்களில் இயல்பு நிலை திரும்புவார் என மருத்துவமனை அறிவிப்பு!

மருத்துவக் குழு: டாக்டர் ஆர்.ஏ. பூர்ணசந்திர தேஜஸ்வி, டாக்டர் நிதின் பெஜ்ஜான்கி, டாக்டர் மதுசூதன் ராவ் மற்றும் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராவ் சுராபனேனி ஆகிய முன்னணி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். 3 மாதங்களில் மீண்டும் பழைய நிலை திரும்புவார் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் “நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்குச் செய்யப்பட்ட தோள்பட்டை அறுவை சிகிச்சை முற்றிலும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

அவர் தற்போது மிகவும் நலமாக உள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் உடற்பயிற்சிகளுக்குப் பிறகு, அடுத்த 2 முதல் 3 மாத காலத்திற்குள் அவர் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பித் திரைப்படப் பணிகளில் ஈடுபடுவார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது தீவிர ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் அவர் விரைவில் பூரண குணமடைந்து திரைக்குத் திரும்ப வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவும் சினிமா உலகமும்: டிஜிட்டல் ஸ்கேனிங் மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களின் எதிர்காலம் குறித்து பிராட் பிட் கவலை!

MUST READ