சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களுக்கான உயரிய பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்குக் ‘குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம்’ உட்பட மொத்தம் 20 பேருக்குக் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவரின் தகைசால் பணிப் பதக்கம்
சீரிய சேவையைப் பாராட்டி வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது:

ஜே. விஜய் ஆனந்த் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
கே. ராமச்சந்திரன் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
எஸ். குமார் – உதவி கமாண்டன்ட்
சிறந்த பணிக்கான மத்திய அரசு பதக்கம்
மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்படும் ‘சிறந்த பணிக்கான பதக்கத்திற்கு’த் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது பெறுவோர் பட்டியல்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்: கே. சிவசங்கர், எம். சோமசுந்தரம், பி. கோவிந்தராஜு
துணை கண்காணிப்பாளர்: எஸ். சண்முகம்
உதவி கமாண்டன்ட்: எஸ். மணிமாறன்
காவல் ஆய்வாளர்கள்: எஸ். மாலதி, ஜி. பத்தருன்னிசா பேகம், சி. மதிமாறன், கே. சரஸ்வதி, பி. மாரியப்பன், எஸ். லட்சுமி, ஜெயா இளவரசி, கே. கோபால், சி. லட்சுமி
காவல் உதவி ஆய்வாளர்கள்: எஸ். பாஸ்கர், ஆர். செந்தில்குமார், என். சதுரகிரி
சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்
காவல் துறை மற்றும் சீருடைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை, சிறந்த செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 20 பேர் மத்திய அரசின் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி, மாநிலக் காவல் துறைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
