Homeசெய்திகள்தமிழ்நாடுஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா: 'இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுப்போம்' - சிபிஎம் பெ.சண்முகம், நடிகை ரோகிணி...

ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா: ‘இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுப்போம்’ – சிபிஎம் பெ.சண்முகம், நடிகை ரோகிணி உரை!

-

- Advertisement -

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பி.டி. தியாகராயர் அரங்கத்தில், தமிழ்நாடு கியூப ஒருமைப்பாட்டு தேசியக் குழு சார்பில் புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா: 'இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுப்போம்' - சிபிஎம் பெ.சண்முகம், நடிகை ரோகிணி உரை!

இந்நிகழ்வில் இந்தியாவிற்கான கியூபத் தூதர் யோவான் கார்லோஸ் மார்சன் அகுய்லேரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் பிரபல நடிகை ரோகிணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

we-r-hiring

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முழக்கம்: பெ.சண்முகம் உரை
விழாவில் சிறப்புரையாற்றிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “சுரண்டல் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே அனைத்துக் கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கனவு. கியூபா, வியட்நாம், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் 20-ஆம் நூற்றாண்டில் கம்யூனிச ஆட்சியை வென்றெடுத்ததைப் போல, இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்ந்து உழைத்து வருகிறது.ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா: 'இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுப்போம்' - சிபிஎம் பெ.சண்முகம், நடிகை ரோகிணி உரை!

கியூபாவில் கம்யூனிச ஆட்சி அமைந்தது முதல் அமெரிக்கா எண்ணற்ற தடைகளை விதித்து வந்தபோதிலும், ஃபிடல் காஸ்ட்ரோ வழியில் அங்குள்ள தலைவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கம்பீரமாக எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் என்பது ஏதோ ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல; அது ஒட்டுமொத்த உலகத்தின் பிரச்சினை என்பதை உணர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, உணவு, சுகாதாரம் மற்றும் அதிகாரம் வழங்கும் கியூபாவின் வழியில், இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுக்க வேண்டும்.”ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா: 'இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுப்போம்' - சிபிஎம் பெ.சண்முகம், நடிகை ரோகிணி உரை!

இளைஞர்களின் குரலை முடக்க முடியாது: நடிகை ரோகிணி ஆவேசம்
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகை ரோகிணி, “அமெரிக்காவின் பல்வேறு தாக்குதல்களையும், காஸ்ட்ரோவைக் கொல்ல நடந்த எத்தனையோ முயற்சிகளையும் முறியடித்து கியூபா தனித்துவமாக நிமிர்ந்து நிற்கிறது. கல்வி, மருத்துவம், உணவு ஆகியவற்றை அரசு மக்களுக்காக வழங்க வேண்டும் என்பதை அந்நாடு நிரூபித்துக் காட்டியுள்ளது. ஜல்லிக்கட்டு போன்ற மக்கள் போராட்டங்களால் ஏற்பட்ட விழிப்புணர்வைக் கண்டு, உண்மை பேசும் இளைஞர்களைக் கண்டு அரசாங்கம் பயப்படுகிறது. ஒரே ஒரு வழக்குப் போட்டு முடக்கிவிட்டால் இந்தத் தலைமுறை அடங்கிவிடும் என நினைக்கிறார்கள்; ஆனால், இந்த இளைய தலைமுறை ஒடுங்காமல், தக்க நேரம் பார்த்துப் பாய்வதற்காகக் காத்திருக்கிறது,” என்று பேசினார்.

கியூபாவின் புரட்சிகர வரலாற்றை நினைவுகூர்ந்தும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்தியும் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் கருத்துரைகளுடன் விழா நிறைவு பெற்றது.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

MUST READ