HomeBreaking Newsசென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப்...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

-

- Advertisement -

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்வில் அரசியல் மற்றும் பொதுநலப் பிரச்சினைகள் குறித்து அமைப்பின் முக்கியப் பார்வையாளரான அண்ணாமலை உரையாற்றினார்.

we-r-hiring

பேரணி நடைபெற்ற இடத்திற்கு அவர் வருகை தந்தபோது, கூட்ட நெரிசல் காரணமாக மேடை அருகே சிறிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், அவற்றை எல்லாம் கடந்து மேடைக்கு வந்த அவர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.

மாறிவரும் அரசியல் கலாச்சாரம்

நிகழ்வில் உரையாற்றிய அவர், தமிழக அரசியலில் இனி பாரம்பரிய மையங்களில் இருந்து மட்டும் முடிவுகள் எடுக்கப்படும் காலம் மாறிவிட்டதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டுக்கான முடிவுகளை எடுக்கும் காலம் மலையேறிவிட்டது. அதேபோன்று, ஜார்ஜ் கோட்டை, கோபாலபுரம், ஈசிஆர் அல்லது போயஸ் கார்டனில் இருந்து மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும் என்கிற காலமும் மாறிவிட்டது,” என்றார்.

மேலும், “மாற்றத்திற்காக வந்த 50 லட்சம் பேர் இணைந்த பின்னர், ‘We the Leaders’ அமைப்பு தனது முழுமையான அரசியல் பயணத்தைத் தொடங்கும். மக்கள் வரிப்பணத்தில் இந்த அமைப்பு வாழவில்லை; மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இது செயல்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும், ஆட்சியின் செயல்பாடுகளும்

தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டினார்.

“எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுங்கட்சி சரியில்லை என்றும், ஆளுங்கட்சியக இருந்தால் எதிர்க்கட்சி சரியில்லை என்பதும்தான் இன்றைய அரசியலாக உள்ளது. ஆளுங்கட்சியைக் கவிழ்த்துவிட்டு எதிர்க்கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்பது மட்டுமே சிலரின் எண்ணமாக இருக்கிறது.

மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழ்நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசும், சட்டமன்ற உறுப்பினர்களும் குறைந்தது ஒரு வருட காலமாவது சுதந்திரமாகப் பணிபுரியட்டும்,” எனத் தெரிவித்தார்.

தேசியக் கட்சிகள் மற்றும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு

தன்னைக் குறித்தும் தனது அரசியல் பயணம் குறித்தும் எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “பாஜகவின் ‘பி’ டீம் தான் அண்ணாமலை என்றும், அமித்ஷா எனது காதில் எதையோ கூறி தமிழ்நாட்டிற்காக அனுப்பியதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், டெல்லியில் பெரிய பொறுப்புகளைத் தருவதாக அமித்ஷா என்னை அழைத்தார். நான் அதனை மறுத்துவிட்டு, மக்களோடு மக்களாகத் தமிழ்நாட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன்,” எனத் தெரிவித்தார்.

மேலும், “கட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; தமிழ்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் ‘We the Leaders’ அமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய அமைப்பாக இது திகழும்,” என்றார்.

முக்கிய கோரிக்கைகள் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையான நதிநீர் மற்றும் பொதுவளங்கள் குறித்துப் பேசுகையில், கர்நாடக விவகாரத்தைக் குறிப்பிட்டார்.

“கர்நாடகத்தில் அணை கட்ட அனுமதியில்லை என்று கூறிவிட்டு, தற்போது பிரச்சினையில்லை என்பது போல மத்திய அரசு கூறுவது நெஞ்சை வலிக்கச் செய்கிறது. பஸ்சை உடைப்பது அல்லது பச்சைத் துண்டு அணிந்து எல்லையில் போய் நிற்பது மட்டுமே அரசியலாகிவிடாது,” என்றார்.

முதலமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட 3 முக்கிய கோரிக்கைகள்

தொடர்ந்து, தமிழக அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் அவர்களுக்குப் பின்வரும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்:

  • தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் உள்ள நிதியிலிருந்து 5 ஆயிரம் கோடி ரூபாயை நீரைச் சேமிக்கும் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும்.

  • இரண்டாவது 5 ஆயிரம் கோடியை அரசுப் பள்ளிகளை முழுமையாகச் சீரமைக்கப் பயன்படுத்த வேண்டும்.

  • மூன்றாவது 5 ஆயிரம் கோடியை கிராமப்புற வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்க வேண்டும்.

இறுதியாக, “டிவிகே (TVK) மற்றும் We the Leaders அமைப்பு இணைந்து நமது காலத்தில் ஊழலை ஒழிப்போம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

“தமிழக அரசு ஒரு சர்க்கஸ் கும்பல்!” – தவெகவை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

MUST READ