திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் வரும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோயில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.


இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கையின்படி, பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் கோயிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் செல்போன்களை எடுத்து வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பு மையங்கள் அமைப்பு
பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல ஏதுவாக கோயில் வளாகத்தில் 5 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு ராஜகோபுரம் அருகில் – 2 இடங்கள்
வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் – 2 இடங்கள்
தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் – 1 இடம்
இந்த மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களுக்கு ரூ.5 கட்டணமாகச் செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். சுவாமி தரிசனம் முடித்துத் திரும்பியதும் அந்த டோக்கனைக் காண்பித்துத் தங்களது செல்போன்களைப் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
விதியை மீறினால் காவல்துறை நடவடிக்கை
இந்தத் தடையையும் மீறி கோயிலுக்குள் மறைமுகமாகச் செல்போன்களை எடுத்துச் சென்றால், அந்தச் செல்போன்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறை மூலமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நீதிமன்ற உத்தரவுடன் பாஜகவின் 160 அடி தேசியக்கொடி பேரணி: திரளானோர் பங்கேற்பு!
