சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,800 என்ற புதிய உச்சத்தை நோக்கி விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்வு: தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென உயர்ந்துள்ள இந்த விலை உயர்வு பொதுமக்களையும், நகை பிரியர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.
கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!
