Homeசெய்திகள்மாவட்டம்சங்கராபுரம் அருகே சீலை உடைத்து ரொக்கம், லேப்டாப் திருடிய மெடிக்கல் உரிமையாளர் கைது!

சங்கராபுரம் அருகே சீலை உடைத்து ரொக்கம், லேப்டாப் திருடிய மெடிக்கல் உரிமையாளர் கைது!

-

- Advertisement -

சங்கராபுரம் அருகே சட்டவிரோதக் கருக்கலைப்பு புகாரில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட மெடிக்கலின் சீலை உடைத்து,ரூ.5,50,000 ரொக்கம் மற்றும் மின்னணுப் பொருட்களை எடுத்துச் சென்ற கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.சங்கராபுரம் அருகே சீலை உடைத்து ரொக்கம், லேப்டாப் திருடிய மெடிக்கல் உரிமையாளர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சோழம்பட்டு கிராமத்தில் இயங்கி வந்த ‘அருண் மெடிக்கல்’ என்ற மருந்தகத்தில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவான கடை உரிமையாளர் சேட்டு என்பவரைத் தேடி வந்த அதிகாரிகள், கடைக்கு அதிரடியாகச் சீல் வைத்தனர்.

we-r-hiring

சீலை உடைத்து திருட்டு:
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சேட்டு, நள்ளிரவில் அரசு அதிகாரிகள் வைத்த சீலைச் சட்டவிரோதமாக உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த ரூ.5,50,000 ரொக்கப் பணம், லேப்டாப் மற்றும் டேப்லட் (Tablet) ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.

போலீசார் அதிரடி கைது:
இதுகுறித்து சோழம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின் சேட்டுவைக் கைது செய்தனர். அவரிடமிருந்த  ரூ.5,50,000 ரொக்கம், லேப்டாப் மற்றும் டேப்லட் ஆகியவற்றை முழுமையாகப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சேட்டு, இதற்கு முன்பும் பலமுறை சட்டவிரோதக் கருக்கலைப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3-வது நாளாக நீடிக்கும் நெல்லை பேப்பர் மில் தீ விபத்து: அணையாமல் எரியும் காகிதக் குவியல்கள்! சாம்பல் மழையால் மக்கள் அவதி

MUST READ