Homeசெய்திகள்சினிமா‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ - சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

-

- Advertisement -

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழக முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

“பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் பல ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்குப் பேரிழப்பாகும்.

சௌகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.”

சௌகார் ஜானகி காலமானார்:

வயது மூப்பு மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, இன்று பிற்பகல் வேளையில் காலமானார்.

வானொலி முதல் வெள்ளித்திரை வரை – சௌகார் ஜானகியின் கலைப்பயணம்:

  • ஆரம்பக்காலம்: ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர், சென்னையில் கல்வி பயின்ற காலத்திலேயே வானொலி நாடகங்களில் பங்கேற்றுத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கினார்.

  • திரையுலக அறிமுகம்: விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தனது இளம் வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ‘சௌகார் ஜானகி’ என்று அழைக்கப்பட்டார்.

  • புகழ்பெற்ற படங்கள்: ‘பாலும் பழமும்’, ‘படிக்காத மேதை’, ‘பாக்கியலட்சுமி’, ‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட பல காவியத் திரைப்படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

  • பல்முகத் திறமை: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பலநூறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர், எந்த மொழியானாலும் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

  • விருதுகளும் கெளரவமும்: கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் நந்தி விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு, இந்திய அரசு உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கெளரவித்தது.

மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி  – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்

 

MUST READ