Homeசெய்திகள்சினிமாகேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி

கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி

-

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகரும், தேமுதிக நிறுவனருமான மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா இன்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் உணர்ச்சிப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

we-r-hiring

இதனையொட்டி சென்னை, தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சிறப்பு மரியாதை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர் சங்க வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்குச் சங்கத்தின் நிர்வாகிகள் திரண்டு வந்து மலர் தூவி, தீப அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்களான ஹேமச்சந்திரன், தளபதி தினேஷ், ஸ்ரீமன் மற்றும் நியமனச் செயற்குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் நேரில் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலியைப் செலுத்தினர்.

நடிகர் சங்கத்தின் திருப்புமுனை நாயகன்:

தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கடனில் சிக்கித் தவித்த காலகட்டத்தில், தலைவராகப் பொறுப்பேற்ற விஜயகாந்த், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்திச் சங்கத்தின் கடன்களை முழுமையாக அடைத்து மீட்டெடுத்தவர். நாடகம் மற்றும் திரைப்படக் கலைஞர்களின் நலனுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து நிர்வாகிகள் தங்கள் புகழஞ்சலியைச் செலுத்தினர்.

இன்று காலை முதலே திரைத்துறை பிரபலங்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கேப்டன் விஜயகாந்தின் நினைவுகளைப் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் புதிய தமிழ் திரைப்படத்தின் தொடக்க விழா: தந்தை-மகள் பாசக் கதையாக உருவாகும் ‘ஹாரர்’!

MUST READ