Homeசெய்திகள்சினிமா‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ - சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி...

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

-

- Advertisement -

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி தனது ஆழ்ந்த இரங்கலையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

we-r-hiring

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்வுபூர்வமான இரங்கல் செய்தி:

“‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பது ஆண்டு காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றி உள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்க இயலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.

அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.”

திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்தும், பல காவியப் படங்களில் தாய்-மகனாகவும் நடித்துப் புகழ்பெற்ற சௌகார் ஜானகியின் மறைவு குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

MUST READ