Homeசெய்திகள்சினிமா"தயாரிப்பாளர்கள் முடிவை மாத்துங்க!" — சினிமா வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு... கதறும் ஆர்.கே.செல்வமணி!

“தயாரிப்பாளர்கள் முடிவை மாத்துங்க!” — சினிமா வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு… கதறும் ஆர்.கே.செல்வமணி!

-

- Advertisement -

திரையரங்கில் திரைப்படங்கள் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிபந்தனையைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு மாபெரும் வேலைநிறுத்தச் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சமேளனம் (பெப்சி) கோரிக்கை விடுத்துள்ளது."தயாரிப்பாளர்கள் முடிவை மாத்துங்க!" — சினிமா வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு... கதறும் ஆர்.கே.செல்வமணி!

திரையரங்க உரிமையாளர்கள் vs தயாரிப்பாளர்கள் சங்கம்
புதிய திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தயாரிப்பாளர்கள் சங்கம் செப்டம்பர் 1-க்குள் முறைப்படி கடிதம் வழங்காவிட்டால், திரையரங்குகளில் படங்களை திரையிட மாட்டோம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1 முதல் புதுப் படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம், படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முழுமையாக நிறுத்துவோம் என்று அறிவித்தன.

we-r-hiring

தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: பெப்சி ஆவேசம்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த வேலைநிறுத்த அறிவிப்பு குறித்துப் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, “படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்போது அதன் நேரடி பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, தினசரி கூலியை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களுக்கும் தான் ஏற்படும்” என்று கவலை தெரிவித்தார்.

முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்குக் கோரிக்கை
மேலும் பேசிய அவர், “இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் திரையுலகின் தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டால் சினிமா துறை மேலும் வேகமாக இயங்க உதவும்” எனக் கூறினார்.  திரைப்படத் துறையையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் நன்கு அறிந்த தற்போதைய முதல்வர், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் தமிழ் திரையுலகில் நிலவி வரும் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி

MUST READ