spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் லட்டு தயாரிக்க தானியங்கி இயந்திரம்

திருப்பதியில் லட்டு தயாரிக்க தானியங்கி இயந்திரம்

-

- Advertisement -
திருப்பதியில் லட்டு தயாரிக்க தானியங்கி இயந்திரம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க 50 கோடி ரூபாய் செலவில் தானியங்கி இயந்திரம் வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் லட்டு தயாரிக்க தானியங்கி இயந்திரம்

திருமலை அன்னமய்யா பவனில் நடைபெற்ற டயல் யுவர் நிகழ்ச்சியில் பக்தர்களின் கேள்விகளுக்கு செயல் அதிகாரி தர்மா ரெட்டி பதில் அளித்தார்.

we-r-hiring

அப்போது கோவில் பிரசாதமான லட்டு தரம் சரியில்லை என குறை கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த தர்மா ரெட்டி பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் பரிசோதனைக்குப் பிறகே லட்டுகளாக தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

திருப்பதியில் லட்டு தயாரிக்க தானியங்கி இயந்திரம்

அவற்றை சிறிது உலர வைத்தால் பிரசாதத்தின் தரம் உயரும் என்று அவர் தெரிவித்தார்.

லட்டு உற்பத்தி அதிகரிக்கும் விதமாக 50 கோடி ரூபாயில் ரிலையன்ஸ் உதவியுடன் தானியங்கி இயந்திரம் வாங்க இருப்பதாகவும் டிசம்பர் மாதத்தில் லட்டுகள் இயந்திரமூலம் தயாரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

MUST READ