Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! சிக்னல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க BSNL - Vodafone Idea அதிரடி திட்டம்!

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! சிக்னல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க BSNL – Vodafone Idea அதிரடி திட்டம்!

-

- Advertisement -

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் சேவைத் தரத்தை மேம்படுத்தவும், கூடுதல் வருவாயை ஈட்டவும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் முன்னணி தனியார் நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை தங்களது தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! சிக்னல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க BSNL - Vodafone Idea அதிரடி திட்டம்!

இக்கூட்டணியின் மூலம் இரு நிறுவனங்களின் நெட்வொர்க் டவர்கள் (Network Towers) மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (Optical Fiber Cable) வசதிகள் இனி பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படும்.

we-r-hiring

சேவை மேம்பாடு மற்றும் கூடுதல் வருவாய்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிஎஸ்என்எல் மற்றும் வி (Vi) வாடிக்கையாளர்களுக்குச் தடையற்ற நெட்வொர்க் இணைப்பு மற்றும் அதிவேக இணைய சேவை கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் நெட்வொர்க் சிக்னல் குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளில் இரு நிறுவனங்களின் சேவைகளும் கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கோபுரங்களை நிறுவுவதற்கும் ஃபைபர் கேபிள்களைப் பதிப்பதற்குமான கூடுதல் செலவீனங்கள் இதன் மூலம் தவிர்க்கப்படுவதோடு, ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கணிசமான கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் துறை சார்ந்த வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கம் நிலவி வரும் சூழலில், பிஎஸ்என்எல் மற்றும் Vi நிறுவனங்களின் இந்த இணைந்து செயல்படும் நடவடிக்கை தொலைத்தொடர்புத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

ஆப்பிள் பிரியர்களுக்கு உற்சாகச் செய்தி: செப்டம்பர் 9-ல் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம்!

MUST READ