மாநகராட்சி நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, வி.சி.க மன்ற உறுப்பினர்கள் கருப்பு உடையில் பங்கேற்பு: மேம்பாட்டு நிதி கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அக்கட்சிகள் ஆதரவு.


திமுக ஆட்சி வந்திருந்தால் இந்த நிலைமை எங்களுக்கு வந்திருக்காது என விசிக மன்ற உறுப்பினர் யாழினி பேச்சு.
சென்னை ரிப்பன் மாளிகையில், மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது மன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது பேசிய பாஜக மன்ற உறுப்பினர் உமா ஆனந்த் கூறும்போது, நிதி இல்லாமல் கூட்டத்தில் பங்கேற்பது பயனில்லாத ஒன்று என்றார், அதற்கு பதிலாக ராஜினாமா செய்து விட்டு வெளியில் சென்று விடலாம் என்று பேசினார், மேலும் நாங்கள் இன்னோவா கார் கேட்கவில்லை என்றும், மக்களுக்கு பணி செய்ய தான் நிதி கேட்கிறோம் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய விசிக மன்ற உறுப்பினர் யாழினி, திமுக ஆட்சி வந்திருந்தால் இந்த நிலைமை எங்களுக்கு வந்திருக்காது என தெரிவித்தார், மேலும்கடந்த திமுக ஆட்சியில் கூட கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்பட்டது ஆனால் தற்போது அதுபோல் இல்லை எனவும் பேசினார்.
அதன்பின் பேசிய அதிமுக மன்ற உறுப்பினர் சத்தியநாதன் கூறும்போது, எந்த ஒரு திட்டங்களையும் செய்ய முடியாமல் போவதற்கு வார்டு கவுன்சிலர் பதவியே தேவையில்லை ராஜினாமா செய்து விட்டு போகலாம் என்றார்.
மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு அக்ரீமெண்ட் போட்டு 7 மாதங்களாகிறது இன்னும் பணியை தொடங்கவில்லை என்றார், எங்கள் மாதிரி நடுத்தர மக்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி அங்கு சமூக நலக்கூடம் கட்ட சொல்லி கோரிக்கை வைத்திருந்தேன் ஆனால் செய்யவில்லை என்று பேசினார்.
பின்னர் பேசிய திமுக உறுப்பினர் ராஜா அன்பழகன், மாநகராட்சியில் 7 அமைச்சர்கள் பொறுப்பாக போட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எங்கே தண்ணீர் நிற்கும் என தெரியாது என்றார். முதலமைச்சர் தொகுதியிலேயே தண்ணீர் எங்கே நிற்கிறது என்று தெரியாது இந்த நிலையில் தான் பொறுப்பு அமைச்சர்களை (முட்டாள்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து உள்ளனர் என குறிப்பிட்டார்) என்று பேசினார்.
துணை மேயர் மகேஷ் குமார் பேச்சு:
கடந்த நான்கு மாதங்களாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு, மாநகராட்சி பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட வேளச்சேரி மேம்பாலம், நடைபாதை திட்டப்பணிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்காக தான் நடைபாதை பணிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.

கடந்த நான்கு மாதத்தில் அரசு 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளது.
தமிழக அரசு நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு உள்ள போதிலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார், பராமரிப்பு செலவுக்கு மட்டும் நிதி ஒதுக்க எப்படி அரசு முன் வருகிறது.
மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை உள்ளது, அதனால் தான் அரசிடம் நிதி பெற்று மாநகராட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த துறையின் அமைச்சராக முதலமைச்சர் உள்ளதால் தான் அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நிதி விடுவிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு மேயர் கடிதம் எழுதி உள்ளார்.
ஆணையர், துறையின் அமைச்சராக உள்ள முதலமைச்சரிடம், நிதி ஒதுக்க வேண்டும் என கேட்கவேண்டும் என என்னுடைய கருத்தை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
சிறப்பான காலை உணவு திட்டத்தை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தான் கொண்டு வந்துள்ளார். மேலும் அந்த திட்டத்தை விரிவுபடுத்தும் பணியும் மேற்கொண்டு வருகிறோம்.
தூய்மை பணியாளர்கள் மகப்பேறு காலத்தில் விடுப்பு கேட்டுள்ளனர், மதிய உணவை தரமானதாகவும் உரிய நேரத்தில் வழங்க வேண்டும், உணவிற்கு பதிலாக தினசரி உணவுப் படி வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க அறை ஒதுக்கி தரவேண்டும், இவை அனைத்தையும் ஆணையர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களில், அடிக்கல் அகற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் அங்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்காடு சாலையில், மழை நீர் வடிகால் பணிகள் பாதியில் உள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு தரவேண்டிய தொகை அளிக்கததால் பணிகள் நின்றுள்ளன. விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அதிகளவு நிதியை ஒதுக்க வேண்டும் என அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்துள்ளனர்.
வார்டு மேம்பாட்டு நிதி வழங்கக் கோரி கருப்பு உடையில் மேயர் பிரியா & திமுக கவுன்சிலர்கள்
