Homeசெய்திகள்சென்னைசென்னை பேரிடர் நிவாரணப் பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் விஜய் அதிரடி...

சென்னை பேரிடர் நிவாரணப் பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

-

- Advertisement -


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் களப்பணிகளை முடுக்கிவிடவும் தவெக அரசு சிறப்புப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.சென்னை பேரிடர் நிவாரணப் பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மழைக்காலங்களில் பொதுமக்கள் சந்திக்கும் பாதிப்புகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் மண்டல வாரியாக பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் விவரம்:
ஒருங்கிணைப்பாளர்:
அனைத்து மண்டல நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கும் தலைமைப் பொறுப்பை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வகிப்பார்.

மண்டலம் 1 & 2 (திருவொற்றியூர், மணலி): அமைச்சர் ரமேஷ்.
மண்டலம் 3 & 4 (மாதவரம், தண்டையார்பேட்டை): அமைச்சர் லோகேஷ் தமிழ்ச் செல்வன்.
மண்டலம் 5 & 6 (ராயபுரம், திரு.வி.க. நகர்): அமைச்சர் அருண்ராஜ்.
மண்டலம் 7, 8 & 9 (அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை): அமைச்சர் விஜய்பாலாஜி.
மண்டலம் 10 & 11 (கோடம்பாக்கம், வளசரவாக்கம்): அமைச்சர் டி.கே. பிரபு.
மண்டலம் 12 & 13 (ஆலந்தூர், அடையாறு): அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.
மண்டலம் 14 & 15 (பெருங்குடி, சோழிங்கநல்லூர்): அமைச்சர் விக்னேஷ்.

முதலமைச்சரின் கடுமையான உத்தரவு
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மழை நீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து உடனடியாக நீர் அகற்றும் எந்திரங்களை தயார் நிலையில் வைப்பது, நிவாரண முகாம்களில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தடையின்றி வழங்குவது ஆகியவை அமைச்சர்களின் முதன்மைப் பணியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பேரிடர் காலத்தில் எந்தவித அசௌகரியத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதை உறுதிசெய்யுமாறும், பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்டலங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் சோகம்: 45 அடி ஆழக் கிணற்றில் தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பரிதாப பலி!

MUST READ