Homeசெய்திகள்சென்னைதூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப்...

தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல் பேசும் முதலமைச்சர் விஜய், போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் துயரங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என உழைப்போர் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!

பெரியார் சிலையிடம் முறையிடும் நூதனப் போராட்டம்:
தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் மற்றும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், சென்னை அண்ணா சாலை சிம்சன் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலையிடம் முறையிடும் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.

we-r-hiring

உழைப்போர் உரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள்:
சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார்; தூய்மைப் பணியாளர்களுக்கு அலட்சியமா? சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிதாகக் கார் வழங்கும் தவெக அரசு, ஏழை எளிய தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரைத் துடைக்க முன்வராதது மிகுந்த கவலையளிப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் அஷ்ரஃப் பேகம் தெரிவித்தார்.

சினிமா பிரபலங்களுக்கு உடனடியாக சந்திப்பு; உழைப்பாளர்களுக்கு ஏமாற்றம்:
உழைப்போர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி பேசுகையில், “கடந்த ஆண்டு தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியைப் பிடித்தவுடன் தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. சினிமாத் துறையினரை உடனுக்குடன் சந்தித்துப் பேசும் முதலமைச்சர் விஜய், நாட்டைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? தமிழ்நாட்டுப் பெண்களை உரிமை கொண்டாடும் விஜய், இப்போது தூய்மைப் பணியாளர் பெண்களை அலட்சியப்படுத்துகிறார்” எனக் கடுமையாகச் சாடினார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது:
போராட்டத்தைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் (கோட்டை) நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்றமா? அல்லது சூப்பர் சிங்கர் மேடையா? – கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாட்டு பாடி தப்பிக்கும் ஆளும் கட்சி!

MUST READ