Homeசெய்திகள்சென்னைசென்னையில் அதிரடி: ஊழல் ஒழிப்புப் பிரிவில் குவிந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் - சூப்பிரண்டு...

சென்னையில் அதிரடி: ஊழல் ஒழிப்புப் பிரிவில் குவிந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் – சூப்பிரண்டு உட்பட 5 போலீஸார் மீது நடவடிக்கை!

-

- Advertisement -

சென்னையில் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவில், ஒரே வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் குவிந்துள்ளன. இதன் அடிப்படையில், சூப்பிரண்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட போலீஸார் சஸ்பெண்ட், பணியிட மாற்றம் மற்றும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் அதிரடி: ஊழல் ஒழிப்புப் பிரிவில் குவிந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் - சூப்பிரண்டு உட்பட 5 போலீஸார் மீது நடவடிக்கை!

சென்னைக் காவல்துறையில் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் தனி ஊழல் ஒழிப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.

we-r-hiring

இ்ப்பிரிவின் மூலம் காவல்துறையினர் யாரும் லஞ்சம் கேட்டாலோ அல்லது பெற்றாலோ பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக 78717-23000 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த எண்ணிற்கு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காவல்துறை மீது 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடவடிக்கை விவரம்:
சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர்: சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்துப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த செல்வராஜ், பொதுமக்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தைத் திரும்ப வழங்குவதற்காக 500 ரூபாய் லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் அவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் நடவடிக்கைகள்: இதற்கிடையே, ஒரு சூப்பிரண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதுடன், லஞ்சப் புகார்களுக்கு ஆளான மற்ற காவலர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 5-க்கும் மேற்பட்டோர் மீது அதிரடியாகத் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, சிலாகக் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறையில் லஞ்சப் புகார்கள் மீது காவல் ஆணையர் நேரடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், லஞ்சம் வாங்கும் போலீஸார் மத்தியில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

வி.ஐ.டி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா: ஆராய்ச்சி மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் – ஒன்றிய முன்னாள் செயலாளர் தி.ராமசாமி பெருமிதம்!

MUST READ