பிரதமர் நரேந்திர மோடி தனது 137-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பம், சமூக நடவடிக்கை மற்றும் மக்கள் பங்கேற்பு மூலம் மாற்றங்களை உருவாக்கி வரும் நபர்களைப் பாராட்டிப் பேசினார்.


மனதின் குரல் உரையின் முக்கிய அம்சங்கள்
போதைப்பொருளற்ற இந்தியா: “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்குப் போதைப்பொருளற்ற இளைஞர்கள்” என்ற இயக்கம் நாடு முழுவதும் வேகமெடுத்து வருகிறது. போதைப்பழக்கம் ஒரு நபரை மட்டுமின்றி முழு குடும்பத்தையும் சமூகத்தையும் சீரழிக்கும். போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்களையும், அதில் இருந்து மீண்டு வர உதவுபவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
தேசபக்தி மாதம்: ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், தேசிய கைத்தறி தினம், தேசிய விண்வெளி தினம் போன்ற பல்வேறு சிறப்புகள் உள்ளன. அத்துடன் ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவது இந்த ஆண்டை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது.
வரலாறு மற்றும் தொழில்நுட்பம்: மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணா சேஷாத்ரி என்பவர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய வரலாற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மேற்கொண்டு வரும் புதுமையான முயற்சியைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் சாதனைகள்: நாகாலாந்தின் ஃபெக் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷாலு புரோஜி என்ற பெண், அறிவியல் பூர்வமாக 5,000-க்கும் மேற்பட்ட கிளாடியோலஸ் மலர்களைச் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார். மேலும், ஒடிசாவில் காடுகளின் பாதுகாப்பில் பெண்கள் முக்கியப் பங்களித்து வருகின்றனர்.
மிஷன் சக்திசாட்: ‘மிஷன் சக்திசாட்’ முயற்சியின் மூலம் 108 நாடுகளைச் சேர்ந்த 12,000 மாணவ-மாணவிகள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு: வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் மக்கள் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிக்கும்’ (வோகல் ஃபார் லோக்கல்) இயக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
“பாஜக, ஆர்எஸ்எஸ் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
