ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் & லடாக் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வப் பரிந்துரை வழங்கியுள்ளது.
கொலீஜியம் கூட்டத்தின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் கூட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பின்வரும் நியமனங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்: சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாகச் பணியாற்றி வரும் நீதிபதி சஞ்சய் கே. அகர்வால், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்: குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி அல்பேஷ் யஷ்வந்த் கோக்ஜே, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம்: ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பேந்திர சிங் பாட்டி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதிமுன்னதாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்: ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ராம் மொஹபத்ரா, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக நீதிபதி மொஹபத்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலீஜியத்தின் இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் புதிய தலைமை நீதிபதிகள் முறைப்படி பொறுப்பேற்பார்கள்.
