Homeசெய்திகள்இந்தியாநாடு முழுவதும் பிஜி நீட் தேர்வு! 2.63 லட்சம் டாக்டர்கள் தேர்வு எழுதினர்

நாடு முழுவதும் பிஜி நீட் தேர்வு! 2.63 லட்சம் டாக்டர்கள் தேர்வு எழுதினர்

-

- Advertisement -

நாடு முழுவதும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வு (NEET-PG) பலத்த பாதுகாப்புடன் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

we-r-hiring

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 339 நகரங்களில் அமைக்கப்பட்ட 1,111 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை மேற்பார்வையிட 2,527 ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாகவும், மூத்த பேராசிரியர்கள் மற்றும் டீன்கள் அடங்கிய 700-க்கும் மேற்பட்டோர் பறக்கும் படை உறுப்பினர்களாகவும் பணியமர்த்தப்பட்டனர்.

2.63 லட்சம் பேர் தேர்வு எழுதினர்:

நடப்பாண்டு முதுநிலை நீட் தேர்வுக்கு மொத்தம் 2,73,096 டாக்டர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,65,980 பேர் தேர்வில் பங்கேற்றனர். இதில் 2,63,535 பேர் வெற்றிகரமாக தேர்வை எழுதி முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு மையங்களில் மறுதேர்வு அறிவிப்பு:

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சீதாபுராவில் உள்ள 2 தேர்வு மையங்களில் திடீரென மின்விநியோகம் பாதிக்கப்பட்டதாலும், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணத்தினாலும் தேர்வர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த 2 மையங்களில் தேர்வெழுதிய 2,445 தேர்வர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) தெரிவித்துள்ளது.

4 விமானங்களில் 68 டன் நிவாரணப் பொருட்கள்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா உதவி

MUST READ