Homeசெய்திகள்இந்தியாகர்பா, தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்குத் தடை! ஆதார் அட்டை கட்டாயம்.. விஹெச்பி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதலால்...

கர்பா, தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்குத் தடை! ஆதார் அட்டை கட்டாயம்.. விஹெச்பி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதலால் சர்ச்சை!

-

- Advertisement -

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவின் போது ஏற்பாடு செய்யப்படும் கர்பா மற்றும் தாண்டியா நடன நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், விஷ்வ இந்து பரிஷத் (VHP) அமைப்பு சர்ச்சைக்குரிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.கர்பா, தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்குத் தடை! ஆதார் அட்டை கட்டாயம்.. விஹெச்பி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஆதார் கார்டு சோதனை கட்டாயம்!
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புகழ்பெற்ற ‘கர்பா’ மற்றும் ‘தாண்டியா’ நடன நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் மைதானங்கள் மற்றும் மண்டபங்களுக்குள் நுழையும் நபர்களின் அடையாளத்தைச் உறுதிசெய்ய ‘ஆதார் அட்டையை’ (Aadhaar Card) கட்டாயம் சரிபார்க்க வேண்டும் எனத் விழா அமைப்பாளர்களுக்கு விஷ்வ இந்து பரிஷத் அறிவுறுத்தியுள்ளது.

we-r-hiring

நிகழ்ச்சி நடக்கும் நுழைவு வாயில்களிலேயே அடையாள அட்டைகளை ஆய்வு செய்து, முஸ்லிம்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கர்பா, தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்குத் தடை! ஆதார் அட்டை கட்டாயம்.. விஹெச்பி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதலால் சர்ச்சை!

சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை!
இது குறித்து விளக்கமளித்துள்ள விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், “கர்பா மற்றும் தாண்டியா என்பது வெறும் கலை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல; அது நவராத்திரி வழிபாட்டின் ஒரு புனிதமான அம்சம். எனவே, உருவ வழிபாடு மற்றும் சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த வழிபாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

எழும் எதிர்ப்புகளும் விவாதங்களும்!
விழா மண்டபங்களில் நுழைபவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் விஹெச்பி அமைப்பு வெளியிட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதல் மகாராஷ்டிர அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் கொடூரம்: சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பரிதாப பலி! – உயிரிழப்பு மேலும் உயரும் என அச்சம்!

MUST READ