சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய புகார்களுக்கு விளக்கம் அளித்த சபாநாயகர் பிரபாகர், முதலமைச்சர் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டே பேசியிருப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆதாரங்களுடன் பேசிய முதலமைச்சர்
சட்டமன்ற நடவடிக்கைகளின் போது முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துக்கள் குறித்து விவாதம் எழுந்தது. இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் பிரபாகர், “முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டும், தகுந்த ஆதாரங்களுடனுமே தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்” என்று கூறினார்.

சர்க்காரியா கமிஷன் & அமலாக்கத்துறை ஆவணங்கள்
தொடர்ந்து பேசிய சபாநாயகர், “சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் புதிதாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே பொதுவெளியில் உள்ள அமலாக்கத்துறையின் (ED) அதிகாரப்பூர்வ ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே அவர் பேசியுள்ளார். அதில் எந்தவித தவறும் இல்லை” எனத் தெரிவித்தார்.
அவைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைக் சுட்டிக்காட்டிய சபாநாயகர், முதலமைச்சரின் பேச்சு விதிகளுக்கு உட்பட்டு அமைந்திருப்பதால், அவரது உரையின் எந்தவொரு பகுதியையும் சட்டப்பேரவை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி, அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
