Homeசெய்திகள்சினிமாதிரைவிமர்சனம்: ஜி.வி.பிரகாஷின் ஃபேண்டஸி காதல் த்ரில்லர் – ரசிகர்களைக் கவர்ந்ததா?

திரைவிமர்சனம்: ஜி.வி.பிரகாஷின் ஃபேண்டஸி காதல் த்ரில்லர் – ரசிகர்களைக் கவர்ந்ததா?

-

- Advertisement -

சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், அந்த வரிசையில் தற்போது ஃபேண்டஸி, காதல் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த புதிய திரைப்படத்தில் கதநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.திரைவிமர்சனம்: ஜி.வி.பிரகாஷின் ஃபேண்டஸி காதல் த்ரில்லர் – ரசிகர்களைக் கவர்ந்ததா?

கதைக்களம்: அழகும் ஆபத்தும் நிறைந்த மாய வீடு

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் தங்குவதற்கு வீடு தேடி வருகிறார். அப்போது, குறைந்த வாடகையில் ஒரு பெரிய சொகுசு வீட்டில் தன்னுடன் தங்கிக் கொள்ளலாம் என நாயகி கயாடு லோகர் அழைப்பு விடுக்கிறார்.

we-r-hiring

அங்குச் செல்லும் ஜி.வி.பிரகாஷுக்கும் கயாடு லோகருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் இக்காதல் ஜி.வி.பிரகாஷை அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுக்கிறது. இதனால் நாயகி மீது சந்தேகம் அடையும் ஜி.வி.பிரகாஷுக்கு அதிர்ச்சியளிக்கும் உண்மை தெரியவருகிறது. தான் காதலிக்கும் பெண் சாதாரணப் பெண் அல்ல; பெண்ணாக உருமாறிய ஒரு கொடிய மிருகம் (ரத்த காட்டேரி) என்றும், தன்னை ஆட்கொள்ளவே திட்டம் தீட்டியுள்ளது என்றும் கண்டறிகிறார். அந்த ஆபத்தான மிருகத்திடமிருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதையாகும்.திரைவிமர்சனம்: ஜி.வி.பிரகாஷின் ஃபேண்டஸி காதல் த்ரில்லர் – ரசிகர்களைக் கவர்ந்ததா?

நடிகர்களின் பங்களிப்பு: கவர்ச்சியிலும் நடிப்பிலும் மிரட்டிய கயாடு லோகர்

  • ஜி.வி.பிரகாஷ்: வழக்கம் போல் தனக்கு வசதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளிலும், த்ரில்லர் காட்சிகளிலும் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

  • கயாடு லோகர்: மிக அழகாக வலம் வரும் நாயகி கயாடு லோகர், கவர்ச்சியிலும் ரசிகர்களைக் கவந்துள்ளார். மிருகமாக மாறும் காட்சிகளில் கூட அழகாகக் காட்சி அளிக்கும் அவர், “அழகில் தான் ஆபத்து இருக்கிறது” என்பதைத் தன் நடிப்பின் மூலம் நேர்த்தியாக உணர்த்தியுள்ளார்.

  • பிற நடிகர்கள்: ஆதித்யா டிவி கதிர் சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த டி.எம்.கார்த்திக் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்துள்ளனர்.

திரைவிமர்சனம்: ஜி.வி.பிரகாஷின் ஃபேண்டஸி காதல் த்ரில்லர் – ரசிகர்களைக் கவர்ந்ததா?

இயக்கம் மற்றும் தொழில்நுட்பக் குழு

  • இயக்கம்: ஜி.வி.பிரகாஷ் வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட பிறகு படும் அல்லல்களைப் பயம் கலந்து காட்ட முயன்ற இயக்குநர் மாரியப்பன் சின்னா, அதில் சற்று சரிவைச் சந்தித்துள்ளார். முதல் பாதி முழுவதும் கிளாமர் காட்சிகளாகவே நகர்ந்து, இரண்டாம் பாதியில்தான் கதைக்குள் செல்கிறது. இரண்டாம் பாதியில் படம் விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படியும் அமைந்திருப்பது பிளஸ். இருப்பினும், திரில்லிங் மற்றும் பயத்தின் வேகத்தை இன்னும் கூட்டியிருந்தால் படம் பெரிதும் பேசப்பட்டிருக்கும்.

  • ஒளிப்பதிவு & இசை: அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக மூவாக்கப்பட்டுள்ளன. சாம் சி.எஸ் இசையில் பாடல்களை விட பின்னணி இசை சில இடங்களில் சிறப்பாகவும், பல இடங்களில் வழக்கம்போல் இரைச்சலாகவும் உள்ளது.

நிறை – குறை மதிப்பீடு

ரத்த காட்டேரி மிருகம் சம்பந்தப்பட்ட ஃபேண்டஸி கதையில் காதலையும் த்ரில்லரையும் கலந்து கொடுத்திருக்கும் இயக்குநர், திரைக்கதையில் இன்னும் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கலாம். இருப்பினும், சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பது படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது.

லண்டன் பந்தய களத்தில் அஜித்தின் கார்கள்: நேரில் காண்கிறாரா முதலமைச்சர் விஜய்? – ரசிகர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு!

MUST READ