Homeசெய்திகள்இந்தியாஅதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள் அகற்றம்!

அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள் அகற்றம்!

-

- Advertisement -

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

we-r-hiring

மருத்துவர்கள் அதிர்ச்சி: மருத்துவமனையில் அப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் பேனாக்கள் மற்றும் ஸ்பூன்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அறுவை சிகிச்சையின்றி அகற்றம்: இதையடுத்து, டாக்டர் ராமச்சந்திர ரெட்டி தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் எண்டோஸ்கோப்பிக் (Endoscopic) சிகிச்சை முறை மூலம், அறுவை சிகிச்சை ஏதுமின்றி பெண்ணின் வயிற்றில் இருந்த:

  • 13 பேனாக்கள்

  • 5 ஸ்பூன்கள்

  • 1 மெழுகுவர்த்தி ஆகியவற்றை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

காரணம் என்ன? சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண், இதேபோல் சில மாதங்களுக்கு முன்பும் 4 பேனாக்களை விழுங்கியிருந்ததாகவும், அப்போது மருத்துவர்கள் அவற்றை அகற்றியதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது சிகிச்சைக்குப் பின் பெண் நலமாக உள்ளார்.

பீகார், உபி மாநிலங்களில் கங்கை ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம்: 27 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!

MUST READ