Homeசெய்திகள்தமிழ்நாடு"கடலோர ஆபத்துகளை உணராமல் முடிவா?" – பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு 'பூவுலகின்...

“கடலோர ஆபத்துகளை உணராமல் முடிவா?” – பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு ‘பூவுலகின் நண்பர்கள்’ கடும் எதிர்ப்பு!

-

- Advertisement -

சென்னையை அடுத்த பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்குப் சுற்றுச்சூழல் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது."கடலோர ஆபத்துகளை உணராமல் முடிவா?" – பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு 'பூவுலகின் நண்பர்கள்' கடும் எதிர்ப்பு!

கடலோரச் சூழலமைப்பு, மீனவர் சமூகத்தின் வாழிட உரிமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்ற அபாயங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இத்திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

we-r-hiring

அரசின் ஆய்வறிக்கையே எச்சரிக்கும் சுனாமி அபாயம்
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

  • அறிவியல் பூர்வமற்ற முடிவு: கடற்கரையிலிருந்து சுமார் 1.6 கிலோமீட்டர் தூரம் வரை கடல் நீர் புகுந்து மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாக மாநில அரசின் சொந்த ஆய்வறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய சூழலில், கடற்கரையிலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவுக்குள் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட முடிவெடுப்பது அறிவியல் மனப்பாங்கு கொண்ட நடவடிக்கை அல்ல.

  • 2004 சுனாமி நினைவுகள்: கடந்த 2004-ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின் போது, தற்போது அரசு தேர்வு செய்துள்ள பகுதி வரை கடல் அலைகளின் சீற்றம் மற்றும் நீரின் தாக்கம் கடுமையாக இருந்தது என்பதை அப்பகுதி மீனவர்கள் நினைவுகூர்கின்றனர்.

சுற்றுச்சூழல் அமைப்பின் கோரிக்கைகளும் மாற்றுப் பரிந்துரைகளும்
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பின்வரும் முதன்மையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

  • மாற்று இடத் தேர்வு: சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கடல் சீற்ற அபாயங்கள் இல்லாத வகையில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை சென்னை நகரின் வேறொரு பாதுகாப்பான மாற்றுப் பகுதியில் அமைக்க வேண்டும்.

  • மீனவர்களுக்கான நீண்டகால குடியிருப்புகள்: தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீனவர் சமூகத்தின் நலனுக்காக ஒதுக்கி, அவர்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு இணங்கப் பாதுகாப்பான குடியிருப்புகளைக் கட்டித் தரத் தமிழக அரசு முன்வர வேண்டும்.

“ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகமா?” – இத்திட்டத்தைக் கைவிடக் கோரி அதிமுக அதிரடி அறிக்கை!

MUST READ