Homeசெய்திகள்தமிழ்நாடு"மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?" - எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!

“மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?” – எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மின்வெட்டே கிடையாது என்று அரசு தரப்பில் கூறிவிட்டு, மறுபுறம் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள முரண்பட்ட தகவலைச் சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கேள்வி எழுப்பியுள்ளார்."மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?" - எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!

முரண்படும் அமைச்சரின் பேச்சு!
தமிழ்நாட்டில் நிலவும் மின் விநியோகம் மற்றும் மின் தட்டுப்பாடு விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கேள்வி மற்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

we-r-hiring

“தமிழ்நாட்டில் எங்குமே மின்வெட்டு என்பதே இல்லை என்று அரசு மார்தட்டிக் கூறி வருகிறது.” “ஆனால், அதே துறையின் அமைச்சரோ மாநிலத்தில் மின் பற்றாக்குறை இருப்பதாகவும், அதனைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப் போவதாகவும் பகிரங்கமாகக் கூறுகிறார்.”

“எதற்காக வெளிச்சந்தையில் மின்சாரம்?”
அமைச்சரின் இந்த முரண்பட்ட பேச்சை வம்பிழுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு எதிராகச் சில நேரடிக் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று அடித்துக் கூறும்போது, பற்றாக்குறை எங்கு வந்தது? அப்படி மின்வெட்டே இல்லை என்றால், எதற்காகத் தமிழக அரசு வெளிச்சந்தையில் சென்று கோடிக்கணக்கில் செலவிட்டு மின்சாரத்தை வாங்க வேண்டும்?” என்று காரசாரமாக வாதிட்டுள்ளார்.

திமுக அரசின் முறையற்ற மின் நிர்வாகத்தினால் தான் மக்கள் அவதிப்படுவதாகவும், உண்மையை மறைத்து மாறி மாறிப் பேசும் அமைச்சர் மற்றும் அரசுக்கு அவர் கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கேள்வி அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா மீண்டும் அறிவிப்பு! செப்.19-ல் ஸ்டாலின் தலைமையில் விழா

MUST READ