Homeசெய்திகள்இந்தியாகர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

-

- Advertisement -

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

KC Venugopal: 50% of office bearers in Congress should be under 50 years of  age, says KC Venugopal - The Economic Times Video | ET Now

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “காங்கிரஸ் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி, கருத்து ஒற்றுமை அடிப்படையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒரே நேரத்தில் பதவி ஏற்றுக்கொள்வார்கள். பெங்களூருவில் இன்று மாலை 7.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் காங்கிரசின் சொத்து. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக பிரச்சாரம் செய்த ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கு நன்றி. ஒருமித்த கருத்தை எட்டவேண்உம் என்பதற்காகவே பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. கர்நாடக காங்கரஸில் பல தலைவர்கள் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களாக உள்ளனர். தகுதியான தலைவர்கள் அதிகம்பேர் இருப்பதால் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றிக்காக சித்தராமையா முக்கிய பங்காற்றினார்” என்றார்.

MUST READ