Homeசெய்திகள்சினிமாநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் டிரெய்லர் வெளியீட்டு விழா!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் டிரெய்லர் வெளியீட்டு விழா!

-

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திருவிளையாடல் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

we-r-hiring

அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் திருவிளையாடல். சிவாஜி கணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, முத்துராமன், நாகேஷ், தேவிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ளார்.

மாபெரும் வெற்றியை பெற்ற இந்தத் திரைப்படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா இப்படத்தை மறுவெளியீடு செய்ய உள்ளார்.

அக்டோபர் 1-ம் தேதி டிரெய்லர் வெளியீடு

திருவிளையாடல் திரைப்படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு, அதன் டிரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 1-ம் தேதி வியாழக்கிழமை சென்னை காசினோ தியேட்டரில் நடைபெற உள்ளது. இந்த நாள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்

இந்த விழாவில் திருவிளையாடல் படத்தின் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகன் ஏ.என். பரமசிவம், நடிகரும் படத் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர் மகேந்திரன், நடிகர் இளவரசு, நடிகை வடிவுக்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

மேலும் நடிகரும் இயக்குனருமான அண்ணாதுரை கண்ணதாசன், கதாசிரியரும் இயக்குனருமான பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் தமிழ் திரைப்படமான திருவிளையாடல் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு தபால் தலை வெளியீடு

MUST READ