spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசலுகைகள் பெற ஆதார் எண் கட்டாயம் - அரசு

சலுகைகள் பெற ஆதார் எண் கட்டாயம் – அரசு

-

- Advertisement -

மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளி வந்து மக்கள் இ-சேவை மையங்களை நோக்கி படையேடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையானது அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்றவை ஆன்லைனில் வழங்கி வருகிறது. அரசின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

மேலும், ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை மூலம் பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறையே உறுதிசெய்யும் என்று அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

MUST READ