Homeசெய்திகள்இந்தியாநிர்மலா சீதாராமன் தலைமையில் 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்டோபர் 8-ல் நடைபெறும்

நிர்மலா சீதாராமன் தலைமையில் 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்டோபர் 8-ல் நடைபெறும்

-

- Advertisement -

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த கூட்டம் முதலில் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை கருத்தில் கொண்டு கூட்டம் அக்டோபர் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற இருந்த 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8-ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தின் உச்சி மாநாட்டு அறையில் (Summit Room) கூட்டம் நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி பதிவு, வருமான கணக்கு தாக்கல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், ஜிஎஸ்டி தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் உள்ளீட்டு வரி வரவு (ITC) பெறும் நடைமுறையை எளிதாக்குவது குறித்தும் விவாதிக்கப்படலாம்.

ஜிஎஸ்டி விதிமீறல்களை குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்குவது, ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரத்தை நீக்குவது உள்ளிட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ஆண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூரு தசராவுக்கு முதல்வர் விஜய்க்கு அழைப்பு! கர்நாடக அரசு எடுத்த முக்கிய முடிவு

MUST READ