வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்று டெல்லியில் பேரணி நடத்துகின்றன.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி இந்தப் பேரணி நடைபெறுகிறது. SIR மூலம் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
