Homeசெய்திகள்இந்தியாதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 68.91% வாக்குப்பதிவு!

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 68.91% வாக்குப்பதிவு!

-

- Advertisement -

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி தொகுதியில் 68.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

we-r-hiring

தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 12,575 ஆண் வாக்காளர்கள், 14,341 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி 19.20 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், காலை 11 மணிக்கு 39.16 சதவீதமாகவும், மதியம் 1 மணிக்கு 57.27 சதவீதமாகவும் வாக்குப்பதிவு அதிகரித்தது. தற்போது பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.91 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதற்காக துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முக்கியப் போட்டி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வினாயகம் மற்றும் திமுக வேட்பாளர் கே. சேதுசெல்வம் இடையே நிலவுகிறது.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இறுதி நேரங்களில் மேலும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை!

MUST READ