ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில், சோச்சி கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.


23 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
அஃப்ராமேக்ஸ் ரியோ (Aframax Rio) என்ற அந்த எண்ணெய் கப்பலில் 23 இந்திய சிப்பந்திகள் பணியாற்றி வந்தனர். டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் தீப்பற்றிய நிலையில், கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் தீப்பிடித்து எரிந்தது
தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆரம்பத்தில் தீயணைப்பு வீரர்களால் கப்பலை நெருங்க முடியவில்லை. சோச்சி கடற்கரையில் இருந்து பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய தீப்பிழம்பும் அடர்த்தியான கரும்புகையும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரைகளில் கட்டுப்பாடு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோச்சி அருகே உள்ள சில கடற்கரைகளுக்குப் பொதுமக்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், காற்று மற்றும் நீரின் தரம் கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கருங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து கோர விபத்து – 32 பேர் பலி!
