Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் அறையில் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது தவறான முன்மாதிரி: திமுக வழக்கறிஞர் பரந்தாமன் விமர்சனம்!

முதல்வர் அறையில் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது தவறான முன்மாதிரி: திமுக வழக்கறிஞர் பரந்தாமன் விமர்சனம்!

-

- Advertisement -

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோர் சந்தித்தனர்.

we-r-hiring

இந்தச் சந்திப்பின்போது, இரண்டு தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் பரந்தாமன், “திணிக்கப்பட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. திமுக அரசியல் ஜனநாயகத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிகார பலத்தைக் கொண்டு த.வெ.க. இந்த இடைத்தேர்தலைச் சந்தித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கூட்டணிக் கட்சியினர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். திமுகவின் வாக்கு வங்கி வலிமையாக இருப்பதை இந்தத் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதல்வர் அறையில் வெற்றிக் கொண்டாட்டம்: பரந்தாமன் விமர்சனம்

தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடியது தவறான முன்மாதிரி என்றும், அது அரசியல் முதிர்ச்சியற்ற செயல் என்றும் பரந்தாமன் விமர்சித்தார். ஜனநாயக நாட்டில் தங்களுக்கான கடமைகளைச் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வெற்றி, தோல்விகளைப் பொருட்படுத்தாமல், இந்தத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தவெக ஆட்சி குறித்து விமர்சனம்

த.வெ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகக் குற்றம்சாட்டிய பரந்தாமன், மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

இந்த இடைத்தேர்தலில் தவெக பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே தவெக பணம் கொடுத்ததாகப் பேசியிருப்பதாகக் குறிப்பிட்டார். இதை வைகோ கவனிக்க வேண்டும் என்றும், அவர் தற்போது இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருக்கிறார் என்றும் விமர்சித்தார்.

தலைமைச் செயலக வளாகம் தவெக அலுவலகம் போன்று செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய பரந்தாமன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் கருத்துகளையும் விமர்சித்தார். அதிமுகவை உடைக்க தவெக செயல்படுவதாகவும், SIR நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்ட கருத்துகளையும் அவர் விமர்சித்தார்.

மேலும், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களைக் குறிப்பிட்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பாஜக குறித்து குற்றச்சாட்டு

திமுகவை இலக்காகக் கொண்டு தவெகவை பாஜக மறைமுகமாக இயக்கி வருவதாகப் பரந்தாமன் குற்றம்சாட்டினார். திராவிட இயக்கத்தின் சித்தாந்தத்தைச் சிதைக்கும் நோக்கில் இத்தகைய செயல்பாடுகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தவெக வெற்றி பெற்ற பின்னரே விசிக அங்கு சென்றதாகக் குறிப்பிட்ட அவர், இந்த இடைத்தேர்தல் மூலம் திமுகவின் வாக்கு பலம் என்ன என்பது தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

“உதயநிதிக்கும் பழனிசாமிக்கும் இடையே நடக்கும் போட்டி, யார் கட்சியை கீழே இழுத்துச் செல்வது என்பதுதான்!” – மாணிக்கம் தாகூர் பேட்டி

MUST READ