Homeசெய்திகள்இந்தியாபெங்களூரு மதுபான பப்பில் போலீசாரை மிரட்டிய சர்ச்சையைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி...

பெங்களூரு மதுபான பப்பில் போலீசாரை மிரட்டிய சர்ச்சையைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி விகாஸ் மர்மத் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

-

- Advertisement -

பெங்களூருவில் உள்ள மதுபான பப்பில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை மிரட்டியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி விகாஸ் மர்மத்தை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

பெங்களூரு பப்பில் நள்ளிரவில் நடந்த மோதல்!

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில், குப்பம் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குநராக விகாஸ் மர்மத் பணியாற்றி வந்தார். இவர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ரெசிடென்சி சாலையில் அமைந்துள்ள மதுபான பப்புக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

அன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், கப்பன் பார்க் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பப்பில் இருந்த வாடிக்கையாளர்களின் வயதைச் சரிபார்ப்பதற்காக அடையாள ஆவணங்களைக் காண்பிக்குமாறு போலீசார் கேட்டுள்ளனர்.

அந்த நேரத்தில், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஐஏஎஸ் அதிகாரி விகாஸ் மர்மத் மற்றும் அபய் உதய் சிங், நிதேஷ், ரோஷன் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், காவல் ஆய்வாளர் அருண் சலுங்கே உள்ளிட்ட போலீசாரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, விவகாரம் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து, போலீசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக விகாஸ் மர்மத் உள்ளிட்ட நான்கு பேர் மீது பெங்களூரு போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசும் விசாரணை மேற்கொண்டது.

அக்டோபர் 14ஆம் தேதி இடமாற்ற உத்தரவு!

சம்பவம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச அரசு அக்டோபர் 14ஆம் தேதி பொது நிர்வாகத் துறை மூலம் அரசாணை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தொகுதியைச் சேர்ந்த விகாஸ் மர்மத் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அடுத்தகட்டப் பணி நியமனம் தொடர்பாகப் பொது நிர்வாகத் துறையில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், குப்பம் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் பொறுப்புகளை நிர்வகிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு பப்பில் போலீசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் ஆந்திர அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

விமானங்களில் குறிப்பிட்ட மாடல் பவர் பேங்க் எடுத்துச் செல்லத் தடை: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை!

MUST READ