Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம்! தமிழக அரசு புதிய உத்தரவு – மாற்று...

அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம்! தமிழக அரசு புதிய உத்தரவு – மாற்று ஆவணங்களுக்கும் அனுமதி

-

- Advertisement -

தமிழக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் ஆதார் விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மணப்பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது.

ஆதார் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் எண் இல்லாதவர்கள் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆதாருக்கு விண்ணப்பித்தும் இதுவரை எண் கிடைக்காதவர்கள், அதற்குப் பதிலாக அரசு குறிப்பிட்டுள்ள மாற்று ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.

மாற்று ஆவணங்களாக புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆதார் சரிபார்ப்பில் சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்வது?

கைரேகை உள்ளிட்ட ஆதார் அடையாளச் சரிபார்ப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், மாற்று அடையாளச் சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கைரேகை சரிபார்ப்பு தோல்வியடைந்தால் கருவிழி அல்லது முக அடையாளச் சரிபார்ப்பைப் பயன்படுத்தலாம். தேவையான சூழலில் ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது ஆதார் கடிதத்தில் உள்ள QR குறியீடு மூலமாகவும் சரிபார்க்கலாம்.

திட்டத்தின் கீழ் என்னென்ன சலுகைகள்?

‘அண்ணன் சீர்’ திட்டத்தின்படி, தகுதியுள்ள மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 2026–27 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப நடைமுறை எப்போது?

திட்டத்துக்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விண்ணப்ப இணையதளம், தேவையான ஆவணங்கள் மற்றும் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை சமூக நலத்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்.

சென்னை எழும்பூர் – திருச்சி இடையே இன்றும் நாளையும் சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்! பண்டிகை பயணிகளுக்கு வசதி

MUST READ