Homeசெய்திகள்தமிழ்நாடுமாநகராட்சி சமூகநலக் கூடம், சகி மைய ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் இல்லை! தீபாவளிக்கு முன்...

மாநகராட்சி சமூகநலக் கூடம், சகி மைய ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் இல்லை! தீபாவளிக்கு முன் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

-

- Advertisement -

சென்னை மாநகராட்சியின் சமூகநலக் கூடங்களில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள சகி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.மாநகராட்சி சமூகநலக் கூடம், சகி மைய ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் இல்லை! தீபாவளிக்கு முன் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகையைத் துயரமின்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், ஊழியர்களுக்கான நிலுவை ஊதியத்தைத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

சமூகநலக் கூட ஊழியர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் இல்லை!

சென்னை பெருநகர மாநகராட்சிக்குச் சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் 600-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு சமூகநலக் கூடத்திலும் தலா 3 பாதுகாவலர்கள், 3 பராமரிப்புப் பணியாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மோனிஷா செக்யூரிட்டி ஏஜென்சி என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதனால், அந்த நிறுவனத்துக்கான ஒப்பந்தத் தொகையை மாநகராட்சி விடுவிக்கவில்லை என்றும், இதைக் காரணம் காட்டி தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகி மைய ஊழியர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் இல்லை!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளால் பாதிக்கப்படுவோருக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் 59 இடங்களில் சகி ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் மைய நிர்வாகி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகி, மூத்த ஆலோசகர், களப்பணியாளர், பாதுகாவலர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 700-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு தொடர்ந்து 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், மையங்களின் பராமரிப்புச் செலவுகளுக்குக்கூட நிதி ஒதுக்கப்படாததால், ஊழியர்கள் கடன் வாங்கி அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதியே சகி மையப் பணியாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதாகவும், அதன் பின்னரும் ஒரு மாதத்துக்கும் மேலாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஊதியம் வழங்க வேண்டும்!

சமூகநலக் கூடங்கள் மற்றும் சகி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் என்றும், குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக அரசின் ஊதியத்தையே நம்பியிருப்பவர்கள் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இவர்களுக்கு போனஸ் அல்லது முன்பணம் வழங்கப்படாத நிலையில், மாதக்கணக்கில் ஊதியமும் வழங்கப்படாமல் இருப்பது அவர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அன்றாடச் செலவுகளைக்கூட சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் தவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அன்புமணி, அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள ஊதியத்தைத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா? – பொதுவேட்பாளர் குறித்த கேள்விக்கு சீமான் பதில்! திமுக, அதிமுக பெருந்தன்மையுடன் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வேன் – சீமான் பேட்டி

MUST READ