Homeசெய்திகள்சென்னைசென்னையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள 23 விளம்பரப் பலகைகள்! உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் – அறப்போர்...

சென்னையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள 23 விளம்பரப் பலகைகள்! உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் – அறப்போர் இயக்கம் புகார்

-

- Advertisement -

சென்னையில் உள்ள விளம்பரப் பலகைகள் பலவும் உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அறப்போர் இயக்கம், இதுதொடர்பாக 23 விளம்பரப் பலகைகளின் ஆதாரங்களுடன் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.சென்னையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள 23 விளம்பரப் பலகைகள்! உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் – அறப்போர் இயக்கம் புகார்

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

we-r-hiring

சென்னையில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளுக்கு உதாரணமாக, 23 விளம்பரப் பலகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் நேரில் ஆய்வு செய்யப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவை அமைந்துள்ள இடங்களைச் சுட்டிக்காட்டும் கூகுள் மேப்ஸ் இணைப்புகளும் ஆதாரங்களாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விளம்பரப் பலகையும் எந்தெந்த குறிப்பிட்ட விதிமுறைகளை மீறியுள்ளது என்பது தனித்தனியாகச் சரிபார்க்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களுடன் கூடிய புகார், முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை அரசு முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். தற்போது ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 23 விளம்பரப் பலகைகள் ஒரு மாதிரி மட்டுமே என்றும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பெரிய அளவிலான விளம்பரப் பலகைகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த இயக்கம், அவை முறையாகப் பராமரிக்கப்படாவிட்டால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.

எனவே, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு 50 புதிய இருசக்கர வாகனங்கள்!

MUST READ