Homeசெய்திகள்சினிமாரீ-ரிலீஸாகும் 90ஸ் கல்ட் கிளாசிக் படங்கள்.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ரீ-ரிலீஸாகும் 90ஸ் கல்ட் கிளாசிக் படங்கள்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

ரீ-ரிலீஸ் செய்யப்படும் இரண்டு 90ஸ் கிட்ஸ் கல்ட் கிளாசிக் படங்கள்ரீ-ரிலீஸாகும் 90ஸ் கல்ட் கிளாசிக் படங்கள்.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

காலங்கள் மாறினாலும் சினிமா ரசிகர்களின் கொண்டாட்டமும் ஆரவாரமும் தலைமுறை கடந்தும் குறையாமல் தொடர்கிறது. ​அன்றைய டூரிங் டாக்கீஸ் காலம் முதல் இன்றைய மல்டிபிளக்ஸ் யுகம் வரை சினிமா என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிரிக்க முடியாத உணர்வாகவே கலந்திருக்கிறது. 90-களில் திரையரங்குகளைக் திருவிழாவாக மாற்றிய அதே ரசிகர் கூட்டம், இன்றைக்கும் தங்களின் ஃபேவரிட் படங்களை திரையில் கொண்டாடுவதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. ​நல்ல கதைக்களமும் மறக்க முடியாத பாடல்களும் அமைந்த திரைப்படங்களுக்கு, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் ஆதரவு குறையவே குறையாது என்பற்கு இந்த கல்ட் கிளாசிக் படங்களே சாட்சி. ​அன்றைய தலைமுறை ரசிகர்களை வியக்க வைத்த காவியங்கள், இன்றைய தலைமுறை சினிமா பிரியர்களையும் அதே ஈர்ப்போடு கட்டிப்போட்டு திரையரங்குகளை நோக்கி இழுக்கின்றன.ரீ-ரிலீஸாகும் 90ஸ் கல்ட் கிளாசிக் படங்கள்.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

we-r-hiring

அந்த வகையில் 90-களில் திரையரங்குகளை அதிரவைத்து, இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இரண்டு கல்ட் கிளாசிக் திரைப்படங்கள் மீண்டும் திரைக்கு வரவுள்ளன.
​இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா நடிப்பில் 1989-ஆம் ஆண்டு வெளியாகி, திரையரங்குகளில் 300 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்த ஆல்டைம் ஃபேவரைட் திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’. இத்திரைப்படம் விரைவில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரீ-ரிலீஸாகும் 90ஸ் கல்ட் கிளாசிக் படங்கள்.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! ​அதேபோல, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா நடிப்பில் 1993-ஆம் ஆண்டு வெளியாகி, 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் சினிமாவிற்குப் புதிய அடையாளத்தைக் கொடுத்த ‘கல்ட் கிளாசிக்’ திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
​இந்த இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு 90ஸ் கிட்ஸ் மற்றும் சினிமா பிரியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ