Homeசெய்திகள்சினிமாவசூல் வேட்டையில் தலைவரே நிரந்தரம்.... பாக்ஸ் ஆபிஸ் சிம்மாசனத்தில் 'ஜெயிலர் 2'!

வசூல் வேட்டையில் தலைவரே நிரந்தரம்…. பாக்ஸ் ஆபிஸ் சிம்மாசனத்தில் ‘ஜெயிலர் 2’!

-

- Advertisement -

இந்திய திரையுலகின் எல்லைகளைத் தாண்டி உலகளவில் தனது அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கும் அந்த மாபெரும் உச்ச நட்சத்திரம் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது ஜெயிலர் 2 திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்து வருகிறது.வசூல் வேட்டையில் தலைவரே நிரந்தரம்.... பாக்ஸ் ஆபிஸ் சிம்மாசனத்தில் 'ஜெயிலர் 2'!

ஏற்கனவே ரஜினி – நெல்சன் – அனிருத் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி கண்டநிலையில் அதே கூட்டணியில் உருவான ஜெயிலர் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடையே மிக உச்சத்தில் இருந்தது. ​இந்த சூழலில், இந்தத் திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்து ஒட்டுமொத்த திரை உலகையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. வசூல் வேட்டையில் தலைவரே நிரந்தரம்.... பாக்ஸ் ஆபிஸ் சிம்மாசனத்தில் 'ஜெயிலர் 2'!வடஇந்தியாவில் உள்ள முக்கிய இந்தி மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளின் ஆதரவு பெரிதாக இல்லாமலேயே, சர்வதேச அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ​உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் ரூ. 800 கோடி என்ற பிரம்மாண்ட வசூலை கடந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையையும் பெற்றுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் இப்படம் ஆயிரம் கோடியை எட்டி விடும் என்று நம்பப்படுகிறது.வசூல் வேட்டையில் தலைவரே நிரந்தரம்.... பாக்ஸ் ஆபிஸ் சிம்மாசனத்தில் 'ஜெயிலர் 2'!
​இத்தனை ஆண்டுகால சினிமாப் பயணத்திலும், தனியொரு ஆளாக கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைத் தனது தோள்களில் சுமந்து நிற்கும் அந்த ஒற்றைப் பெருமை ‘தலைவர்’ ரஜினிகாந்திற்கு மட்டுமே சாத்தியம் என்பதையும் ‘தலைவரே நிரந்தரம்’ என்பதையும் இத்திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.

MUST READ