அஜித்தின் டேர் டெவில் திரைப்படத்தை நடிகை ஷாலினி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது அசைக்க முடியாத மாஸ் மற்றும் ஸ்டைலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கும் உச்ச நட்சத்திரமான அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். அதன்படி இவர்களது கூட்டணியிலான புதிய படத்திற்கு டேர் டெவில் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஷாலினி அஜித்குமாரின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த படமானது இன்று (நவம்பர் 2) பூஜையுடன் வெகு விமர்சையாகத் தொடங்கியுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே இத்திரைப்படம் குறித்த ஒவ்வொரு தகவலும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் எடுக்கப்பட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த பிரம்மாண்ட படத்தின் பூஜை விழாவில் ஆதிக் ரவிச்சந்திரன், ஷாலினி அஜித்குமார், பார்த்திபன், பிரபு போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அஜித்குமாரின் அன்பு மனைவியான ஷாலினி அஜித்குமார் முன்னின்று இந்த படத்தை தொடங்கி வைத்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
First Clap Done ✅
#AjithKumar’s #DareDevil Poojai Video
#Shalini AjithKumar https://t.co/S7ewbJ5HeK
— Movie Tamil (@_MovieTamil) November 2, 2026

மேலும், இப்படத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்தது தெலுங்கு நடிகர் சுனில், மூத்த நடிகர் பிரபு மற்றும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
