Homeசெய்திகள்தமிழ்நாடுமானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்கான கொள்முதல் ஆணை ரத்து ஏன்? – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்கான கொள்முதல் ஆணை ரத்து ஏன்? – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

-

- Advertisement -

நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்கான கொள்முதல் ஆணை ரத்து ஏன்? – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்ட வெங்காயத்தின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் இணையம் (TNCCF) சார்பில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பான NAFED நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபர் மாதம் ஆணை வழங்கப்பட்டது.

இந்த வெங்காயம் நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள வெங்காய இருப்பை ஆய்வு செய்வதற்காக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சென்றபோது, தமிழ்நாட்டிற்கு அனுப்ப வேண்டிய வெங்காயம் ஒரு நாள் முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை ஆய்வு செய்தபோது, அழுகிய மற்றும் நிராகரிக்கப்பட வேண்டிய தரத்திலான வெங்காயங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 31.10.2026 அன்று சென்னை கொருக்குப்பேட்டையில் வெங்காயம் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, மொத்த வெங்காயத்தில் 50.2 சதவீதம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடச் சிறியதாக இருந்தது தெரியவந்தது. மேலும், 20 முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதனால், பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்வதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டது.

இந்தக் கொள்முதல் நடவடிக்கைக்காக முன்பணம் எதுவும் வழங்கப்படாததால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காய அரசு! – MLA-க்களை வாங்கத் தெரிந்த டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

MUST READ