Homeசெய்திகள்சினிமா18 பாடல்களுடன் உருவாகும் தனுஷின் 'ஓம்' - சாய் அபியங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

18 பாடல்களுடன் உருவாகும் தனுஷின் ‘ஓம்’ – சாய் அபியங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

-

- Advertisement -

தனுஷின் ஓம் படம் குறித்து சாய் அபியங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.18 பாடல்களுடன் உருவாகும் தனுஷின் 'ஓம்' - சாய் அபியங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

​பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஓம்’. முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திறமையான நடிகர்கள் இணைந்துள்ள இத்திரைப்படம் வரும் 20-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் வேளையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
​இந்நிலையில், இப்படத்தின் இசை குறித்த சுவாரஸ்யமான மற்றும் பிரம்மாண்டமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஓம்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் சாய் அபியங்கர், ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படம் குறித்துப் பேசும்போது, இப்படத்தின் ஆல்பத்தில் மொத்தம் 18 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 18 பாடல்களுடன் உருவாகும் தனுஷின் 'ஓம்' - சாய் அபியங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!படத்தின் கதைக்களம் குறிப்பிட்ட சில இசை வடிவங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் என்றாலும், அந்த எல்லைகளை மீறி பல்வேறு விதமான புதிய ஒலிகளுடன் பரிசோதனை செய்து இசையமைத்துள்ளதாக அவர் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் படத்தில் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ