Homeசெய்திகள்சினிமா'இந்த படத்தில் ஐந்து ஹீரோக்கள்'- 'ஓம்' பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!

‘இந்த படத்தில் ஐந்து ஹீரோக்கள்’- ‘ஓம்’ பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் ஓம் படம் குறித்து பேசியுள்ளார்.'இந்த படத்தில் ஐந்து ஹீரோக்கள்'- 'ஓம்' பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் இன்று (நவம்பர் 6) கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், படம் குறித்தும் இயக்குநர் ராஜ்குமார் மற்றும் உடன் பணியாற்றிய கலைஞர்கள் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 'இந்த படத்தில் ஐந்து ஹீரோக்கள்'- 'ஓம்' பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சிப் பேச்சு!அதன்படி விழாவில் பேசிய தனுஷ், “இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோக்கள் இருக்கிறார்கள். மம்மூட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இசையமைப்பாளர் சாய் அபியங்கர் மற்றும் இறுதியாக நான். இது வெறும் மல்டி ஸ்டாரர் படம் மட்டுமல்ல, ஐந்து ஹீரோக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு படம்” என்று பெருமிதத்துடன் கூறினார்.18 பாடல்களுடன் உருவாகும் தனுஷின் 'ஓம்' - சாய் அபியங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!மேலும் இயக்குநர் ராஜ்குமார் குறித்துப் பேசிய அவர், “ராஜ்குமார் போன்ற ஒருவரை நான் பார்த்ததே இல்லை. அவருக்குத் தன் மீதும் தனது கதையின் மீதும் அளப்பரிய நம்பிக்கை உள்ளது. தனது குழுவிடமிருந்து சிறந்த வேலையை எப்படி வாங்குவது என்பதும், ரசிகர்களுக்கு என்ன தேவை என்பதும் அவருக்குத் துல்லியமாகத் தெரியும்.'இந்த படத்தில் ஐந்து ஹீரோக்கள்'- 'ஓம்' பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சிப் பேச்சு! இதுபோன்ற ஒரு படத்திற்கு ‘அலாகா லூவா’ போன்ற பாடல்கள் அவசியமில்லை என்றாலும், எனது ரசிகர்களுக்காக நான் நடனமாட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் அதை அமைத்துக் கொடுத்துள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

we-r-hiring

மேலும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ