Homeசெய்திகள்சினிமா'பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு' .... எஸ்.யு. அருண்குமாரின் கடிதம் வைரல்!

‘பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு’ …. எஸ்.யு. அருண்குமாரின் கடிதம் வைரல்!

-

- Advertisement -

எஸ்.யு. அருண்குமார், கமல்ஹாசன் குறித்து கடிதம் வெளியிட்டுள்ளார்.'பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு' .... எஸ்.யு. அருண்குமாரின் கடிதம் வைரல்!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 7) அவரது 237-வது திரைப்படமான ‘சண்டியர்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு, படப்பிடிப்பும் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், கமல்ஹாசனை இயக்குவது குறித்து இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் தனது உணர்வுகளை ஒரு நெகிழ்ச்சியான கடிதத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “எனது அனைத்துப் படைப்புகளிலும் நான் அறிந்தும் அறியாமலும் ஒரு உன்னத கலைஞனின் பலவித தாக்கங்கள் இருந்து கொண்டே வந்தது. அவையனைத்தும் என்னை செழுமைப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், இன்று நான் அந்த உன்னத மகா கலைஞன் திரு. கமல்ஹாசன் அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.'பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு' .... எஸ்.யு. அருண்குமாரின் கடிதம் வைரல்!மேலும் தொடர்ந்த அவர், “என்னை இயக்குநராகத் தேர்ந்தெடுத்து என் கதைக்கு உயிரூட்டிய எனது மானசீக ஆசானை நான் இயக்குவதோடு, இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய நிறைய கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. இப்பெருங்கனவை நிஜமாக்க உதவிய திரு. மகேந்திரன் அவர்களுக்கும், நண்பன் திரு. டிஸ்னி அவர்களுக்கும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, நானும் எனது குழுவும் முழு கவனத்தையும் உழைப்பையும் கொடுத்து இந்தத் திரைப்படத்தை ஆகச்சிறந்த படைப்பாக சினிமா ரசிகர்களுக்கு கொடுப்போம் என்ற நம்பிக்கையை விதைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இயக்குநர் எஸ்.யு. அருண்குமாரின் இந்த உருக்கமான கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி, கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் நெகிழ்ச்சியையும் பேரார்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ