Homeசெய்திகள்சினிமா'சூப்பர் ஸ்டார் படத்தில் தெலுங்கு மாஸ் ஹீரோ'- தீபாவளி சரவெடியாக வெளியான 'தர்மன்' பட மாஸ்...

‘சூப்பர் ஸ்டார் படத்தில் தெலுங்கு மாஸ் ஹீரோ’- தீபாவளி சரவெடியாக வெளியான ‘தர்மன்’ பட மாஸ் அப்டேட்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'சூப்பர் ஸ்டார் படத்தில் தெலுங்கு மாஸ் ஹீரோ'- தீபாவளி சரவெடியாக வெளியான 'தர்மன்' பட மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இப்படத்தில் ரஜினிகாந்த் ‘டாக்டர்’ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும், இப்படத்தில் ஸ்ரீலீலா, சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். 'சூப்பர் ஸ்டார் படத்தில் தெலுங்கு மாஸ் ஹீரோ'- தீபாவளி சரவெடியாக வெளியான 'தர்மன்' பட மாஸ் அப்டேட்!ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில், இப்படத்திலிருந்து ஒரு மாஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தெலுங்கு திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி ‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் மூலமாக நடிகர் ராம் பொத்தினேனி தமிழ் சினிமாவில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்து அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ராம் பொத்தினேனி கைகோர்த்துள்ள இந்த தீபாவளி சிறப்பு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

MUST READ