Homeசெய்திகள்சினிமா'நான் மகான் அல்ல' பாணியில் ஒரு எமோஷனல் த்ரில்லர் ... 'டெலிவரி பாய்' படத்தை பாராட்டிய...

‘நான் மகான் அல்ல’ பாணியில் ஒரு எமோஷனல் த்ரில்லர் … ‘டெலிவரி பாய்’ படத்தை பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்!

-

- Advertisement -

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் டெலிவரி பாய் படத்தை பாராட்டியுள்ளார்.'நான் மகான் அல்ல' பாணியில் ஒரு எமோஷனல் த்ரில்லர் ... 'டெலிவரி பாய்' படத்தை பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்!

இயக்குநர் சுசீந்திரனின் உதவி இயக்குநரான நானி எழுத்து மற்றும் இயக்கத்தில், லியோ சிவகுமார் மற்றும் ‘கலை அரசி’ ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘டெலிவரி பாய்’. லெனின் மாதேஸ்வரன் மற்றும் அமுதா லியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு சுந்தரமூர்த்தி K.S இசையமைக்க, அசோக்குமார் ராஜ் – பிரசன்னா S குமார் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
வரும் நவம்பர் 27 அன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எக்ஸ் பக்கத்தில் இத்திரைப்படத்தை பாராட்டி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், “குறைந்த எதிர்பார்ப்புகளுடன் தான் லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தைப் பார்த்தேன். ஆனால், படம் மிகவும் சுவாரஸ்யமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், செறிவான ஆக்ஷன் காட்சிகளுடனும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ஆபத்தான கட்டத்தில் இருக்கும் மற்ற மனிதர்களுக்கு, அவர்கள் யாரென்று தெரியாவிட்டாலும் உதவி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளார் இயக்குநர் நானி.

we-r-hiring

இயக்குநர் சுசீந்திரன் சாரின் உதவி இயக்குநர் நானி, ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தைப் போல ஒரு மிகச்சிறப்பான எமோஷனல் த்ரில்லர் படத்தை உருவாக்கியுள்ளார். கதாநாயகனாக நடித்த லியோ சிவகுமார் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். ராதிகா மேம் இப்படத்திற்கு மிகப்பெரிய தூணாகப் பலம் சேர்த்துள்ளார்” எனப் படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உணர்ச்சிப்பூர்வமான கதைக் களத்தோடு உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ