Homeசெய்திகள்உலகம்“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

-

- Advertisement -

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் அமோக வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்றம் ஜனநாயகக் கட்சியினர் வசம் சென்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இரு அவைகளையும் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி!

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் இருந்த பல்வேறு மாகாணங்களிலும் வெற்றி பெற்றனர்.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் கணிசமான இடங்களைக் கைப்பற்றியதுடன், செனட் சபையிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கண்காணிப்பும், அரசியல் சவால்களும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, டெக்சாஸ், தெற்கு கரோலினா, கன்சாஸ் உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் வலுவான செல்வாக்கு கொண்ட பகுதிகளிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவு குறித்து டிரம்ப் கருத்து!

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப், தான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பதிவில், தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், போட்டியிட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வரும் மசோதாக்கள் நியாயமற்றதாக இருந்தால் அவற்றுக்கு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை பெற்றுள்ளதால், டிரம்ப் அரசின் நிர்வாக நடவடிக்கைகள், வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விசாரணைகள் நடத்த வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஈரான் மீதான போர் நடவடிக்கைகள், இறக்குமதி வரிக் கொள்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய கவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் தொடங்கும்போது, இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் தங்களது பெரும்பான்மையைப் பயன்படுத்தி டிரம்ப் அரசின் கொள்கைகளுக்கு சவால் விடுக்க முடியும்.

இருப்பினும், அமெரிக்க அதிபராக டிரம்ப் தொடர்ந்து தனது நிர்வாக அதிகாரங்களையும், மசோதாக்களை நிராகரிக்கும் வீட்டோ அதிகாரத்தையும் கொண்டிருப்பார். இதனால் வெள்ளை மாளிகைக்கும் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்திற்கும் இடையே அரசியல் மோதல்கள் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எலும்பும் தோலுமாக மாறிய தி ராக்! வைரல் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி – காரணம் என்ன?

MUST READ