Homeசெய்திகள்சினிமா'ஓம்' படத்தின் டைட்டில் ரகசியம் இதுதானா?.... இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

‘ஓம்’ படத்தின் டைட்டில் ரகசியம் இதுதானா?…. இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

-

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஓம் படத்தின் டைட்டில் குறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.'ஓம்' படத்தின் டைட்டில் ரகசியம் இதுதானா?.... இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரின் நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் தான் ஓம். இந்த படமானது தனுஷின் 55வது படமாகும். இதனை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ஆர்- டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படமானது வரும் நவம்பர் 20 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பிற்கான காரணம் மற்றும் படப்பிடிப்பு ரகசியங்களை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். 'ஓம்' படத்தின் டைட்டில் ரகசியம் இதுதானா?.... இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!அதன்படி அவர் ​தனது பேட்டியில், “திருப்பதி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு ஆன்மீக நகரங்களுக்கு இடையே நடைபெறும் வகையில் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் சாய் பல்லவியின் ஆப்ரேஷன் பெயரும் ‘ஓம்’ என்பதுதான். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆன்மீகம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
​’அமரன்’ படத்தில் சினிமா குறித்துப் பேசிக்கொண்டே திடீரென எதிரிகளை எதிர்கொள்ளும் அந்த விறுவிறுப்பான தாக்குதல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது போல, ‘ஓம்’ திரைப்படத்திலும் சிங்கிள் ஷாட் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான காட்சிகளை நேரடி இடங்களில் படமாக்கியுள்ளோம். இணையத்தில் தனுஷ் சார் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடனமாடுவது போல AI படங்கள் பரவுவதைப் பார்த்தேன். ஆனால் படத்தில் அதுபோன்ற பாடல்கள் எதுவுமில்லை. ‘அலகா லோவா’ பாடலானது கதையின் சூழ்நிலைக்குத் தேவைப்பட்ட ஒரே ஒரு டான்ஸ் நம்பர் மட்டுமே. அது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பாடல் அல்ல” என்று தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

we-r-hiring

 

MUST READ